கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இந்த ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரம் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க சுழற்சி முறை பயன்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் எந்த வாக்குப்பதிவு இயந்திரம், எந்தத் தொகுதிக்குச் செல்கிறது என்பது தெரியாததால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 6) நடந்தது.
இதனை அடுத்து தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்ற பின்னர் இதே சுழற்சி முறையில் பூத்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு!