ETV Bharat / state

பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - kanyakumari kottar labours protest

கன்னியாகுமரி : கோட்டார் பகுதியில் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடியைக் கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kanyakumari kottar labours
kanyakumari kottar labours
author img

By

Published : Feb 7, 2020, 10:54 AM IST

குமரி மாவட்டம், கோட்டார் பகுதி வணிக தலங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் எப்போதும் லாரிகளில் வணிகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் இருக்கும். இதனால் இந்தப் பகுதி எப்போதுமே போக்குவரத்து நெருக்கடி மிகுந்து பரபரப்பாகக் காணப்படும்.

இப்பகுதியில் லாரிகளில் வரும் பாரங்களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் லாரிகளில் வரும் பாரங்களை அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இறக்கி கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கோட்டார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்

இந்நிலையில், கோட்டார் பகுதியில் பகலில் அதிக நெருக்கடி ஏற்படுவதாகவும், இதனால் லாரிகளில் வரும் பொருட்களை இரவு நேரத்தில் மட்டுமே இறக்க வேண்டும் எனவும் அலுவலர்கள் கெடிபிடி விதித்துள்ளனர்.

இதனால் வேலை கிடைக்காமல் திண்டாட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், அரசு அலுவலர்களின் இந்தப் போக்கை கண்டித்து கோட்டார் பகுதியில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னாள் கவுன்சிலர்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் பாரம் ஏற்றும் மற்றும் இறக்கும் தொழிலாளர்கள் பகல் நேரத்தில் பணியில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Body:குமரி மாவட்டம் கோட்டார் பகுதி வணிக தலங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் எப்போதும் லாரிகளில் வணிகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் இருக்கும். இதனால் இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து பரபரப்பாக காணப்படும்.

இப்பகுதியில் லாரிகளில் வரும் பாரங்களை ஏற்றும் மற்றும் இறக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் லாரிகளில் வரும் பாரங்களை அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இறக்கி கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டாறு பகுதியில் பகலில் அதிக நெருக்கடி ஏற்படுவதாகவும், இதனால் லாரியில் வரும் பொருட்களை இரவு நேரத்தில் மட்டும் தான் திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து,கோட்டார் பகுதியில் பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.