அம்பேத்கரின் 64ஆவது நினைவுதினத்தை ஓட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது உருவ சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நாளை(டிச.7) வேல் யாத்திரை நிகழ்ச்சி நடக்கும்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்காக காத்திருக்கிறோம். முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், அதன் பின்பு தேசிய தலைமை உடன் கலந்து ஆலோசித்த பிறகு எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது” என்றார்.
இந்தப் பேட்டியின்போது பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழ்நாடு இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாளை முதல் கல்லூரிகள் திறப்பு: கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!