ETV Bharat / state

'புன்னகை மன்னன் வசந்த குமாருக்கு வாக்களியுங்கள்...!' - குஷ்பு வாக்கு சேகரிப்பு - நடிகை குஷ்பூ

கன்னியாகுமரி: புன்னகை மன்னன் வசந்த குமாருக்கு வாக்களியுங்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

நடிகை குஷ்பூ
author img

By

Published : Apr 15, 2019, 3:53 PM IST

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த அளவிற்கு நாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மோடி உங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னாரே செய்தாரா? வேலை வாய்ப்பு தருவதாகச் சொன்னார்... அது நடந்ததா? பெண்களுக்கு பாதுகாப்புத் தருவதாகச் சொன்னார். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனரா? என பொதுமக்களிடம் அடுக்கடுக்கான கேள்வியெழுப்பினார்.

நடிகை குஷ்பூ

மேலும் அவர் கூறுகையில், 'காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை 450 ரூபாய் இருந்தது. இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்துவிட்டது. பெண்கள் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சித் தொடர் பார்ப்பீர்கள். கேபிள் டிவி கட்டணம் 150 ரூபாய் இருந்தது. இன்று எல்லா சேனலும் பெறவேண்டுமானால் 350 ரூபாய் கட்டணம் ஆகிவிட்டது. விரும்பிய அலைவரிசைகளை நீங்கள் பார்க்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

இந்த மக்களவைத் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வந்தால்தான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். எனவே புன்னகை மன்னன் வசந்தகுமாருக்கு வாக்களியுங்கள். கடந்த முறை தோல்வி அடைந்த போதும் உங்களுக்காக பணி செய்தார். காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும் வசந்தகுமார்தான்' எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குஷ்பு.

Intro:கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த அளவிற்கு நாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். மோடி உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார் அது வந்துச்சா வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார் அது நடந்துச்சா பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னார் அது செய்தாரா என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.

Body:கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த அளவிற்கு நாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். மோடி உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார் அது வந்துச்சா வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார் அது நடந்துச்சா பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னார் அது செய்தாரா என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். கொட்டாரம் பகுதியில் குஷ்பூ பேசும் போது வரும் 18ம் தேதி வாக்களிக்க முன்பு கடந்த 5 ஆண்டுகளாக எந்த அளவிற்கு நாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை பொதுமக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். மோடி உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார் வந்துச்சா, வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார் நடைபெற்றதா, பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னார் செய்தாரா, விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் விலை 450 ரூபாய் இருந்தது இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது .பெண்கள் வீட்டில் இருக்கும்போது டிவி சீரியல் பார்ப்பீர்கள் கேபிள் டிவி கட்டணம் 150 ரூபாய் இருந்தது இன்று எல்லா சேனலும் பெறவேண்டுமானால் 350 ரூபாய் கட்டணம் ஆகிவிட்டது. இஷ்டப்பட்ட ஜன்னல்கள் நீங்கள் பார்க்க முடியாது .அவர்கள் என்னென்ன சொல்கிறார்களோ அந்த சேனல்கள் தான் நீங்க பார்க்கணும். அவங்க என்ன சொல்கிறார்களோ அதை தான் நீங்கள் கேட்கனும். அவங்க என்ன சொல்றாங்களோ அதை தான் நீங்க சாப்பிடணும் .அவங்க யரை காதலிக்க சொல்லுறாங்களோ அவங்களை தான் காதலிக்கனும் .அவங்க யாரை கல்யாணம் பண்ண சொல்லுறாங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணனும் எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் எல்லாம் மாற்றமும் கொண்டு வர முடியும். இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். இந்தியாவில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவரது கனவை நினைவாக்க வேண்டும். எனவே புன்னகை மன்னன் வசந்தகுமாருக்கு வாக்களியுங்கள். கடந்த முறை தோல்வி அடைந்த போதும் உங்களுக்காக பணி செய்தார். காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் வசந்தகுமார் ஒரு குடும்பத்திற்கு 22 ஆயிரம் ரூபாய் உங்கள் வீடு தேடி வரும் என்றார் அவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.