நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் கோட்டாறு பகுதி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இளைஞர் ஒருவர் அங்கு சுற்றி திரிந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது பறக்கை ரோட்டை சேர்ந்த ராஜகணேஷ் என்பதும், மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பேருந்து நிலையத்தில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 1.25கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.