கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையிகல், இக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டுகள் 100ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட உள்ளது. கூடிய விரைவில் எம்.டி., எம்.சி.எச் எனப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை உயர் படிப்பு தொடங்கப்பட உள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி ஒரு வாரத்தில் செயல்பட உள்ளது என தெரிவித்தார்.