கேரள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை சூரிய உதயத்தை ரசிக்கிறார். காலை 8 மணிக்கு மேல் தனி படகில் சென்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடுகிறார்.
பின்னர் மாலை சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசித்த பின்னர் அவர் மீண்டும் கேரளா புறப்பட்டுச் செல்கிறார். கேரள ஆளுநர் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.