கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் அப்பகுதியில் மரப்பட்டறை தொழில் செய்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருநாம செல்விக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை.
திருமணத்தின் போது திருநாமசெல்விக்கு அவரது பெற்றோர் 31 பவுன் தங்க நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தொகை மற்றும் 2 லட்ச ரூபாய் மதிப்பலான வீட்டு உபயோகப்பொருட்கள் என வரதட்சணையாக கொடுத்துள்ளனர். தற்போது புதிய வீடு கட்டும் ஸ்டீபனுக்கு மேலும் பணம் தேவைப்பட்டுள்ளது.
இதற்காக திருநாம செல்வியின் பெற்றோரிடம் கூடுதலாக பணம், நகை ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லி தனது மனைவியை ஸ்டீபன் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார். அது மட்டுமின்றி திருநாமசெல்வி வேலைபார்க்கும் துணிக்கடைக்கு சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திருநாமசொல்லி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். அதன் பேரில் கணவர் ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பாஜக நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து: முன்னாள் அமைச்சர் உட்பட பலர் காயம்!