ETV Bharat / state

தன்னோடு வர வேண்டும்... எஸ்.பி. அலுவலகத்தில் தம்பதிகளிடம் கதறிய தாய்! - குமரி மாவட்ட செய்தி

நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த புதுமண தம்பதிகளிடம் தன்னோடு வர வேண்டும் என பெண்ணின் தாய் தரையில் புரண்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

kanykumari-sp-office-womans-mother-wept-to-couple-who-came-to-give-petition
தன்னோடு வர வேண்டும்.. எஸ்.பி. அலுவலகத்தில் தம்பதிகளிடம் கதறிய தாய்!
author img

By

Published : Mar 13, 2020, 4:49 PM IST

Updated : Mar 13, 2020, 5:12 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மீட்பர் நகர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (28). அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் குமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த யேசுதாஸ் என்பவரை கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு வினோதினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வினோதினியும், யேசுதாசும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததால், தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு குமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

தன்னோடு வர வேண்டும்... எஸ்.பி. அலுவலகத்தில் தம்பதிகளிடம் கதறிய தாய்!

அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தபோது வினோதினியின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு வந்ததால் இரு தரப்பினர் இடையே ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வினோதினியின் தாய் திடீரென வினோதினி தன்னோடு வர வேண்டும் எனக்கூறி தரையில் புரண்டு அழத் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி காவல் துறையினர், தம்பதிகளை அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். அதையடுத்து வினோதினியின் பெற்றோரை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இறந்த மகனின் உடலருகே தாயும் உயிரிழந்த சோகம்!

Last Updated : Mar 13, 2020, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.