ETV Bharat / state

கோழிக்கழிவை கொட்டிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்த மக்கள்! - kerala

கன்னியாகுமரி: தனியார் தோட்டத்தில் கோழிக் கழிவை கொட்டிச் சென்ற லாரியை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோழி கழிவு ஏற்றிவந்த லாரி
author img

By

Published : May 4, 2019, 5:07 AM IST

கேரளத்திலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள், தமிழக பகுதிகளில் அவ்வப்போது கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. முக்கிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பகுதிகளில் அதிகமாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கொட்டி விட்டுச் செல்லும் குப்பைகளால் துர்நாற்றம், சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இராமனாதிச்சன்புதூர் பகுதியில் சந்தேகப்படும்படியான ஒரு கன்டெய்னர் லாரி நேற்று காலை வந்துள்ளது.

கோழிக் கழிவு ஏற்றிவந்த லாரி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அதிலிருந்து தாங்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை மடக்கிப் பிடித்து, சோதனை செய்ததில் அதில் கோழி கழிவுகள் ஆங்காங்கே ஒட்டியிருந்ததை கண்டறிந்தனர்.

இதுகுறித்து, அந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, கேரளத்திலிருந்து கோழி கழிவை எடுத்து வந்து இந்த பகுதியிலுள்ள ஒரு தோப்பில் கொட்டிவிட்டு திரும்ப வந்ததாக தெரிவித்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த லாரியை மருங்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. பலமுறை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தாலும், பெரியதாக நடவடிக்கை எடுக்கப்படாததால் இதுபோன்ற சம்பவம் தொடர்கிறது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

தகவலறிந்த அஞ்சுகிராமம் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து, கோழி கழிவு ஏற்றிவந்த லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN_KNK_02_03_MEAT WASTE_POLICESTATION_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி மருங்கூர் இராமனாதிச்சன்புதூர் பகுதியில் கேரளத்திலிருந்து கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரியை ஊர் மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டு வந்து தமிழ்நாட்டிற்குள் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் சுகாதார கேடுகள் மற்றும் பலவிதமான நோய்கள் ஏற்படுத்துவதாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்தும் இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை போலீசில் பிடித்து கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை இராமனாதிச்சன்புதூர் பகுதியில் சந்தேகப்படும்படியான ஒரு கண்டைனர் லாரி வந்தது. அதிலிருந்து தாங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை மடக்கி பிடித்து பார்த்தனர். அப்போது அந்த லாரியின் கன்டைனரில் கோழி கழிவுகள் ஆங்காங்கே ஒட்டியிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது கேரளத்திலிருந்து கோழி கழிவை எடுத்து வந்து இந்த பகுதியிலுள்ள ஒரு தோப்பில் கொட்டிவிட்டு திரும்ப வந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த லாரியை மருங்கூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது: இதுபோல் கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. பலமுறை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தும் ஒரு சின்ன அபராதம் விதித்துவிட்டு அவர்களை விட்டு விடுவதால் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்துகொன்டே செல்கிறது. எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இதுபோல் கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டாதவாறு ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து கோழி கழிவு ஏற்றிவந்த லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.