ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீசார் கைகலப்பு; ஆயுதப்படைக்கு மாற்றம்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியின்போது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட இரண்டு போலீசார், ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

காவலர் கிருஷ்ணகுமார்
author img

By

Published : May 3, 2019, 5:55 AM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், நாகர்கோவிலில் உள்ள கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ளது. அங்கு காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் ஓய்வெடுக்க கல்லூரி வளாகத்தில் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் காவலர் மதுகுடித்துவிட்டு போதையில் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு காவலரோடு திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் ஒருவரைக்கொருவர் சரமாரியாக தாக்கியும், தகாத வார்த்தையில் திட்டியும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் விசாரணை மேற்கொண்டார். மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உட்பட இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

TN_KNK_01_02_POLICE_CLASH_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட இருவரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஓய்வெடுக்க கல்லூரி வளாகத்தில் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு ஓய்வெடுத்த காவலர் இருவருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டி கொண்டு மோதலில் ஈடுபட்டதுடன் இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளனர். ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த இந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உடனடி விசாரணை மேற்கொண்டு, மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். குடி போதையில் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணகுமார் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில், தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் போலீசாரிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.