கன்னியாகுமரி : மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி முழுவதும் இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு