கன்னியாகுமரி: நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஆண்கள் ஆடையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை குளச்சல் பகுதியை சேர்ந்த ஜோசப் பவின் (39) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜூலை 14) வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்ற நிலையில் இன்று காலையில் கடை திறக்க வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப் பவின் கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆண்கள் ஆடையகத்தின் பின் பக்க கதவை உடைந்த கொள்ளையன் கடைக்குள் சென்று பணம் உள்ளதா என பார்த்துள்ளார். பணம் எதுவும் கிடைக்காத நிலையில் பல ஆயிரம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அங்கு விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஆண் உருவ பொம்மையின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்தில் கொள்ளையன் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில், கொள்ளையடித்த வீட்டில் குறட்டை விட்டு தூங்கியது, சமையல் செய்து நிதானமாக இருந்து சாப்பிட்டு முடித்து கொள்ளையடித்து சென்றது போன்ற கொள்ளை பின்னணிகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூம் பட பாணியில் கொள்ளை: கர்நாடக மாநில கொள்ளையன் கைது