கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அலுவலகத்தில் இருந்த பொருள்கள் அனைத்தும் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்த அலுவலகத்திற்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நேசமணி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் பள்ளிக்குள் நுழைந்த காட்டெருமை - அச்சமைடந்த மாணவர்கள்