ETV Bharat / state

பாஜகவின் ஆதரவால் குமரியைக் கைப்பற்றிய அதிமுக - கன்னியாகுமரி அதிமுக வெற்றி

குமரி: மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியைக் கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியது.

kanyakumari-panchayat-union-chairman-post-won-by-admk-bjp-alliance
குமரியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது!
author img

By

Published : Jan 11, 2020, 11:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஒரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவியும் காலியாக இருந்தன. அப்பஞ்சாயத்து தலைவர் பதவியை பாஜக ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுக வேட்பாளர் மெர்லியண்ட் தாஸ் பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற குமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டல் ரமணிபாய் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ராஜக்காமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஐயப்பன் தேர்வு செய்யப்பட்டார். தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாந்தினி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

தக்கலை ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் அருள் ஆண்டனி தேர்வு செய்யப்பட்டார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அழகேசன் தேர்வு செய்யப்பட்டார். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவராக பாஜக ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.

குமரியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது!

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசவுந்தரி தேர்வு செய்யப்பட்டார். குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றியத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த அனுஷியா தேவி தேர்வு செய்யப்பட்டார். திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுக வேட்பாளர் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்படி ஒன்பது ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை காங்கிரஸ் - திமுக கூட்டணி நான்கு இடங்களையும், பாஜக - அதிமுக கூட்டணி ஐந்து இடங்களையும் பெற்றன. இதன்மூலம் அதிமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியைக் கைப்பற்றியது.

இதையும் படியுங்க: ராஜபாளையத்தில் திமுக, அதிகமுகவினர் இடையே வாக்குவாதம்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.Body:குமரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து 1 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியும், 9 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவியும் காலியாக இருந்தன. இந்த பதவிகளை நிரப்புவதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பாஜக ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுக வேட்பாளர் மெர்லியண்ட்தாஸ் பதவியேற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற குமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டல் ரமணிபாய் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். ராஜகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஐயப்பன் தேர்வு செய்யப்பட்டார். தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த சாந்தினி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவராக காங்கிரஸ் கட்சியின் அருள் ஆன்றனி தேர்வு செய்யப்பட்டார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த அழகேசன் தேர்வு செய்யப்பட்டார். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக பாஜக ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.

மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானசவுந்தரி தேர்வு செய்யப்பட்டார். குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவராக பாஜகவை சேர்ந்த அனுஷியா தேவி தேர்வு செய்யப்பட்டார். திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.Conclusion:இதன்படி 9 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை காங்கிரஸ்-திமுக கூட்டணி 4 இடங்களையும், பாஜக-அதிமுக கூட்டணி 5 இடங்களையும் பெற்றதுடன், அதிமுக கூட்டணி கூடுதலாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியும் கைப்பற்றி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.