ETV Bharat / state

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து, கன்னியாகுமரி ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி ரயில்நிலையம்
author img

By

Published : Apr 30, 2019, 8:28 PM IST

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கர்நாடகா காவல்துறை கட்டுப்பாடு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். பின்னர் இந்த தகவல் பொய் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கன்னியாகுமரி ரயில்நிலையம்

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி ரயில்நிலையத்திலும் தற்போது காவல் துறையினர், வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

TN_KNK_01_30_RAILWAY STATION_BOMB THREAT_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி தமிழகத்தில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் 3 தேவாலயங் கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாடு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், "கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக 19 தீவிரவாதிகள் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் நுழைந்துள்ளனர். இவர்கள் அங் கிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு சென்று தொடர் வெடிகுண்டு தாக்கு தல் நடத்தப் போகிறார்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார். இதனையடுத்து அன்று முதல் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலுள்ள ரயில்நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கூடும் மிகவும் முக்கியம் வாய்ந்த சர்வதேச சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி ரயில்நிலையத்திலும் தற்போது போலீசார் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் ஈடுபடும் போலீசார் அங்குள்ள பொருட்கள், அங்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை தீவிர சோதனை செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.