மக்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் காக்கவே இந்த உத்தரவுகள் போடப்பட்டு இருந்தாலும் இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால் அவர்களுக்கு அரசு இலவச நியாயவிலைக்கடை பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காய்கறி நிவாரண தொகுப்பை அதிமுக மாவட்ட செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான எஸ்.ஏ அசோகன் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது வீட்டிற்குச் சென்று வழங்கினார்.
அப்போது அவர் மக்களிடம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு கூறினார்.
இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!