ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கன்னியாகுமரி!

கன்னியாகுமரி: அரையாண்டுத் தேர்வு விடுமுறை, புத்தாண்டு என அடுத்தடுத்த விடுமுறையையொட்டி குமரிக் கடலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

kanniyakumari
kanniyakumari
author img

By

Published : Dec 30, 2019, 8:41 AM IST

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டை முன்னிட்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இன்று அரசு விடுமுறை என்பதால் பணிக்குச் செல்வோரும், சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவரும், வெளி மாநிலத்தவரும் குழந்தைகளோடு வந்து குதூகலித்தனர்.

கன்னியாகுமரியில் நிரம்பி வழிந்த சுற்றுலாப் பயணிகள்

கடற்கரையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளால் குமரிக் கடல் நிரம்பி வழிந்தது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜ் மண்டபம், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவற்றைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் ஆவலோடு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்தச் சூழலில் கடல் நீர்மட்டம் குறைவாகக் காணப்பட்டதால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து செயல்பட்டது.

இதனால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்த தமிழ் ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லாமல் ஏமாற்றமடைந்தனர். அலை மோதிய கூட்டத்தினால் கடலில் போடப்பட்டிருந்தத் தடுப்பு கயிற்றை தாண்டியும் சிலர் குளித்து விளையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அதிகப்படியான காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச கராத்தே தொடர் - பதக்கங்களைக் குவித்த தமிழ்நாடு

Intro:கன்னியாகுமரியில் இன்று அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.பாதுகாப்பிற்கு அதிகப்படியான போலிசாரை நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.Body:tn_knk_02_tourist_crowd_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரியில் இன்று அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.பாதுகாப்பிற்கு அதிகப்படியான போலிசாரை நியமிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

சர்வதேச சுற்றுலா தலமான
சர்வதேசர. சர்வதேச ன. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டை முன்னிட்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டும் அல்லாது நெல்லை, தூத்துக்குடி மற்றும் வடமாநிலத்திலிருந்தும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம், காமராஜ் மண்டபம், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக டிக்கெட் அலுவலகம் முன் தொடங்கிய வரிசை, சன்னதி தெருக்களை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்டு மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிலையம் வரை இருந்தது.

இந்நிலையில் கடல் நீர்மட்டம் குறைவு என்ன காரணம் சொல்லி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து செயல்பட்டது. இதனால் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லாமல் ஏமாற்றமடைந்தனர்.முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் நீராடினர்.

கடலில் போடப்பட்டிருந்த தடுப்பு கயிற்றை தாண்டியும் சில சுற்றலா பயணிகள் நீராடினர். கூட்டம் மிகுதி காரணமாக சுற்றுலா பயணிகளை கண்காணிக்க அந்த பகுதியில் போலீசார் இல்லை.

முன்னதாக அதிகாலையில் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி கடற்கரை இன்று களை கட்டியது.மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கன்னியாகுமரி அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குற்றச் செயல்களை தடுக்கும் வண்ணம் அதிகப்படியான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.