கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் யூனியன் அமைப்பை சேர்ந்த ஏராளமான மீனவ பிரதிநிதிகள், இன்று (நவ.20) நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "நாளை உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்விதமாக, தேசிய மீன்வள கொள்கை- 2020 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனை வாபஸ் பெற வேண்டும்.
இதுதவிர மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நலனும் இதுவரை கிடைக்கவில்லை. குறிப்பாக 60 வயதான ஒருவருக்கு கூட மீனவருக்கான ஓய்வு ஊதியம், மீனவ நல வாரியம் மூலம் வழங்கப்படவில்லை. 4,266 பேருக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மானியம், இதுவரை மீனவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றப்பட்டு வருகிறது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களை பாதுகாக்க விஞ்ஞான முறை தொழில் நுட்ப கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கடல் சீற்றாதால், ஆழ் கடலில் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து வரும் போது, தங்களையும் தங்கள் படகு உள்ளிட்ட உடமைகளையும் காப்பாற்ற தொலை தொடர்பு கருவிகள் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: வாகன ஆய்வாளரிடம் லஞ்சம் ஒழிப்புத் துறையினர் ரூ.1.69 லட்சம் பறிமுதல்!