கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “"பிரதமர் நரேந்திர மோடியின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் கீழ் ரூ. 6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு மாதம் தோறும் வழங்குவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் மத்திய ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள், முகமையாளர்களாக செயல்பட்டு சட்டத்துக்கு புறம்பாக வேளாண்துறை அலுவலர்களைப் பயன்படுத்தி அந்த பணத்தை கையாடல் செய்துள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை மீது சிபிசிஐடி விசாரணை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: விளை நிலங்களை சூறையாடும் கரடியை விரட்ட விவசாயிகள் கோரிக்கை!