கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுரு குற்றாலம் என்பவருக்கும் வேறு ஒருவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தீர்த்து வைப்பதாக சிவகுரு குற்றாலத்திடம் இருந்து மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தங்கவேல் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
டிஎஸ்பி கைது: அதனடிப்படையில் இன்று (ஏப்.5) மாலை நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வளாகத்திலுள்ள மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையில், டிஎஸ்பி தங்கவேல் ரூ.5 லட்சம் லஞ்சமாக பெற்றதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரே லஞ்சம் பெற்றது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி இழப்பு? - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை