தமிழகத்தில் வருகிற ஏப் 18ஆம் தேதிநாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருகிறது. இதற்காக தமிழகத்தில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் தங்கள் கட்சிக்காக வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையில்ஈடுப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். இவர் நாங்குநேரி எம்எல்ஏ.,வாகவும்உள்ளார்.
இந்நிலையில், வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வாசலில் இருந்து தனக்காக வாக்கு சேகரித்து தனது முதல் தேர்தல் பரப்புரை பயணத்தைத்தொடங்கினார். இதில் திமுக சட்டப்பேரவைஉறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உட்பட காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.