ETV Bharat / state

அவரச நிகழ்வுக்காக வெளியூர் செல்ல ஆட்சியர் அலுவலகத்தில் குவியும் மக்கள் - வெளியூர் செல்ல அனுமதி வழங்கும் கன்னியாகுமரி ஆட்சியர்

கன்னியாகுமரி: அவசர நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை பெறுவதற்காக விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

kanyakumari collector granting permission for travel

author img

By

Published : Mar 31, 2020, 9:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. குறிப்பாக, இறப்பு, நெருங்கிய உறவினர் திருமணம், அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு வெளியூர் செல்வதற்கான அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்ப மனுக்களையும், எதற்காக செல்கிறோம் என்பது தொடர்பான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

வெளியூர் செல்ல ஆட்சியர் அலுவலகத்தில் குவியும் மக்கள்

அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினம்தோறும் ஏராளமானோர் விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது விண்ணப்பங்களை காட்டி வெளியூர் செல்வதற்கான அனுமதி சீட்டை பெற்றுச் செல்கின்றனர்.

இதையும் படிங்க... டெல்லி சென்று நாமக்கல் திரும்பிய 24 பேர் தனி வார்டில் அனுமதி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.