கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் மார்ச் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து மார்ச் 16ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், குமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில் முருகன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.டி. செல்வகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா ஆகியோர் நேற்று (மார்ச் 17) தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சொர்ணராஜுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.