ETV Bharat / state

லாரியின் பின்பக்கம் மோதி கார் விபத்து - பொறியியல் மாணவர் உயிரிழப்பு! - பொறியல் மாணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: வில்லுக்குறி அருகே டாரஸ் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பொறியியல் மாணவர் உயிரிழந்தார்.

Kanyakumari accident: one died and three injured

author img

By

Published : Jan 27, 2021, 4:09 PM IST

தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சலீம். அரசு போக்குவரத்து கழக ஊழியரான இவருக்கு மனைவி மன்சூரா, மகள்கள் பாத்திமா, ஷகிலா, மகன் முகமது ஆதாம் ஆகியோர் உள்ளனர். இவர்களில், சலீம் தவிர்த்து இவரது மனைவி, மகன், மகள்கள் நான்கு பேராக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள உறவினர் இறுதி சடங்கிற்கு செல்வதற்காக தென்காசியிலிருந்து கார்த்திகேயன் என்பவரது காரில் அதிகாலை புறப்பட்டுள்ளனர். காரை கார்த்திகேயன் ஓட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த சிமெண்ட் பாரம் ஏற்றிய டாரஸ் லாரியின் பின்பக்கமாக அதிவேகமாக மோதியது. இதில் முன்பக்க இடது புறம் இருந்த முகமது ஆதாம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல் துறையினர் உயிரிழந்த முகமது ஆதாம் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய, மூன்று பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் அதிருஷ்ட வசமாக காயங்கள் இன்றி ஓட்டுநர் கார்த்திகேயன் உயிர் தப்பினார்.

தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் கார்த்திகேயன் மீது இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க...பெண்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.