ETV Bharat / state

கன்னியாகுமரி: 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - கன்னியாகுமரி: 6 சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலானது ஆர்.டி.ஓ., தாலுக்கா அலுவலகங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

k
k
author img

By

Published : Oct 16, 2020, 8:02 PM IST

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்டோபர் 16) வெளியிடப்பட்டது

நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும், பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ அலுவலத்தில் குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளுக்கான பட்டியலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலானது வருகிற 22ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் ஆட்சேபனை, கோரிக்கை எதுவும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே கேட்டுக்கொண்டார்.

மேலும், வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதியில் 2,84,089 வாக்காளர்களும், நாகர்கோவில் தொகுதியில் 2,62,479 வாக்காளர்களும், குளச்சல் தொகுதியில் 2,60,215, பத்மநாபபுரம் தொகுதியில் 2,31,576 வாக்காளர்களும், விளவங்கோடு தொகுதியில் 2,43,883 வாக்காளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 2,46,917 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.