குமரி மாவட்டம் மகாதானபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சபிதா (51). இவரது மகள் ரேஷ்மா (19) நாகர்கோயிலில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரேஷ்மா நேற்று காலை 10 மணியளவில் நாகர்கோயிலில் உள்ள தனது தோழி ஒருவர் வீட்டுக்குச் சென்று வருவதாக தாயாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். மாலை நேரம் வரை ரேஷ்மா வீடு திரும்பாததால் அவரது தாயார் சபிதா பல இடங்களில் தேடி உள்ளார்.
பின்னர் எங்கு தேடியும் ரேஷ்மா கிடைக்காததால் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சபிதா புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் கொலை வழக்கு: குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல் துறை!