கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள மறவன்குடியிருப்பு ஊர் பொதுமக்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான 49ஆம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்தும் நைஜீரியா நாட்டிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆண்கள், பெண்கள் அணிகளாக கலந்து கொண்டு ஆடுகளத்தில் பட்டையைக் கிளப்பினர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியின் முடிவில் வெற்றி பெறும் அணிக்கு, தஸ்நேவிஸ் மாதா கோப்பையும் பரிசுப் பணமும் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் பரிசாக ரூ.1 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ. 30 ஆயிரமும் வழங்கப்படும். இதே போன்று பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்படவுள்ளது.
'விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' - அய்யாக்கண்ணு!
குமரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்தக் கால இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை களத்திற்குக் கொண்டு வந்து அவர்களின் உடலையும் உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்கு விளையாடும் ஏராளமான வீரர்கள் பல்வேறு பிரபலமான கால்பந்தாட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்" எனக் கூறினர்.