ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை தோளில் சுமந்து சாதனை நிகழ்த்திய குமரி இளைஞர்!

author img

By

Published : Mar 4, 2021, 7:49 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 270 கிலோ எடை உள்ள இரண்டு இருசக்கர வாகனங்களை தனது தோளில் 42 மீட்டர் சுமந்தபடி தூக்கி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இருசக்கர வாகனங்களை தோளில் சுமந்து சாதனை நிகழ்த்திய குமரி இளைஞர்  இரும்பு மனிதர்  இரும்பு மனிதர் கண்ணன்  சோழன் உலக சாதனை புக் ஆப் ரெக்கார்டு  Cholan World Record Book of Records  Iron Man Kannan  Iron Man  Kanniyakumari youth who achieved the feat of carrying two wheelers on his shoulders
Kanniyakumari youth who achieved the feat of carrying two wheelers on his shoulders

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்ற இவர், ஏற்கனவே 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்து சாதனை புரிந்தார். மேலும் இவர் இது போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி சோழன் உலக சாதனை புக் ஆப் ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட உடல் வலுவுக்கும் சங்கம் சார்பில் கண்ணன் நாகர்கோவிலில் இந்து கல்லூரி அருகேயுள்ள மைதானத்தில் சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் சுமந்தபடி 42 மீட்டர் தூரத்திற்கு நடந்தார்.

ஏற்கனவே நடந்த 30 மீட்டர் தூர சாதனையை முறியடித்து இவர் 42 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தை சுமந்து சென்றுள்ளார். இந்தச் சாதனையை உலக சாதனை சோழன் புக் ஆப் ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சாதனை நிகழ்த்திய குமரி இளைஞர்

இது குறித்து கண்ணன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதனை புரிய துடிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்ட வேண்டும்” என்றார். இந்தச் சாதனையை என்று ஏராளமானோர் கண்டு ரசித்து பாராட்டினார்கள்.
இதையும் படிங்க: மும்முறை தாண்டுதலில் உலக சாதனை படைத்த ஜாங்கோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.