சென்னை: தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் கீழ் குறைக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், "2023-24 ஆம் ஆண்டில் மாதிரி பதிவு முறை (SRS) தரவுப்படி, தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் தற்போது 1 லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தில் ஒரு நிலையான சரிவு காணப்பட்டாலும், தமிழ்நாடு மாநிலத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க அரசு தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மகப்பேறு இறப்புகளை "கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மரணம் அல்லது கர்ப்பம் முடிந்த 42 நாட்களுக்குள் இறப்புக்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல் மகப்பேறு மற்றும் மகப்பேறு அல்லாத வரையறுக்கிறது. தற்போதைய பிறப்பு விகிதத்தில், தமிழ்நாட்டில் 8,78,271 கர்ப்பம் பதிவு என PICME போர்டல் பிறப்புகள் நடப்பதாகத் தேசிய சுகாதார இயக்கத்தில் உள்ள தரவு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், மகப்பேறு இறப்பு விகிதம் (எம்எம்ஆர்) பல்வேறு காரணங்களால் 1 லட்சம் பிறப்புகளில் 54 பெண்கள் இறக்கின்றனர். 2004ஆம் ஆண்டு தமிழக அரசு மகப்பேறு இறப்புத் தணிக்கையைத் தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மகப்பேறு இறப்பு தணிக்கை அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்புகளுக்கான காரணம்:
- பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்தக்கசிவு (25 சதவீதம்)
- உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் (22 சதவீதம்)
- பெபைஸ் (10 சதவீதம்)
- இதய நோய் (8 சதவீதம்)
- கருக்கலைப்பு (4 சதவீதம்)
அதாவது, கர்ப்பம் தொடர்பான இறப்புகளில் சுமார் 80 சதவீதம் தடுக்கக் கூடியவை என்பதை அறியலாம். பிரசவத்திற்கு முந்தைய திட்டமிடல், திறன் மேம்பாடு, அத்தியாவசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளை கிடைக்கச் செய்தல் போன்றவற்றின் மூலம் மகப்பேறு இறப்புகளைக் குறைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநரானது, மாநிலத்தில் தாய் சேய் மரணத்தைத் தடுப்பதற்காக மாநில, மாவட்ட அளவிலான கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்புக்கான காரணங்களை ஆராய்ந்து, இறப்புகளைத் தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட காரணிகளைக் கண்டறிய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல். அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்பகால சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பான குழந்தை பிறப்புக்குத் தேவையான மருத்துவர்கள், உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சேவைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிறப்பு, முன் பிறப்பு திட்டமிடல் (பிபிபிஎம்) மூலம் பிறப்பு வசதிகளை முன்கூட்டியே தணிக்கை செய்வதை உறுதி செய்தல், தனியார் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்த மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைத்தல் என
அடுத்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை 10க்கும் குறைவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் தனது பணியைச் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்