உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரூபேந்தர் பாண்டே (57) என்பவர் கார்கில் போரில் வீர மரணமடைந்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் மனோஜ் பாண்டேயின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், பாதுகாப்புப் படை குறித்து இந்திய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு தனது இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தைத் தொடங்கினார்.
இவர் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் வழியாக காஷ்மீரை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்றடைகிறார்.
பின்னர், கேப்டன் மனோஜ் பாண்டேவின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட தேசிய கொடியை (மனோஜ் பாண்டேவுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட தேசிய கொடி) வருகின்ற 15ஆம் தேதி ஸ்ரீநகரிலுள்ள லால்சவுக்கில் ஏற்றிவைக்கிறார்.