ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ: குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்! - ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 13, 2019, 8:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சீரோபாய்ண்ட் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த 47 குடும்பங்களை பேச்சிப்பாறை அணை விரிவாக்கப் பணிக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைக் கண்டித்தும் அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குண்டு குழிகளை கண்டு கொள்ளாத சார் ஆட்சியர் சரண்யாவை கண்டித்தும் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அப்போது, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மனோ தங்கராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை சீரோபாய்ண்ட் பகுதியில் மூன்று தலைமுறையாக குடியிருந்த குடியிருப்பு வாசிகளை அப்புறப்படுத்திய விவகாரத்தில் சார் ஆட்சியர் சரண்யாவை கண்டித்து பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் தக்கலையில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல். போலீசாருக்கும் போராட்டக்காரர்கள்ல் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.Body:கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சீரோபாய்ண்ட் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த 47 குடும்பம்பங்களை பேச்சிப்பாறை அணை விரிவாக்க பணிக்காக அங்கிருந்து அப்புற படுத்தினர். இதை கண்டித்தும் அழகியபாண்டிபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குண்டு குழிகளை கண்டு கொள்ளாத சார் ஆட்சியர் சரண்யாவை கண்டித்து இன்று தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிட், SDPI கட்சிகள் இணைந்து பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். தக்கலை டி.எஸ்.பி கார்த்திகேயன் தலமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மனோதங்கராஜ் எம்எல்ஏ திருவனந்தபும்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் போராட்டக்
காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதானால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.