ETV Bharat / state

மழைப் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்ட விஜய் வசந்த் எம்.பி., ஆய்வு - vijay vasanth

கன்னியாகுமரி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரைக் கிராமங்களை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் ஆய்வு செய்தார்.

vijay vasanth , விஜய் வசந்த்
kanniyakumari-mp-vijay-vasanth-visit-fishemen-village
author img

By

Published : May 30, 2021, 8:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கடற்கரைக் கிராமங்களான மணக்குடி, பள்ளம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி., விஜய் வசந்த் நேரில் ஆய்வு

மேலும், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து விஜய் வசந்த் ஆறுதல் கூறினார். அதேபோல், கடற்கரைக் கிராமங்களில் தூண்டில் வளைவையும், தண்ணீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: GoBackStalin ட்விட்டரில் முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.