குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தினக்கூலி வேலைக்குச் செல்வோர் போதிய வருமானமின்றி உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில், அந்த தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம், லீபுரம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு!