ETV Bharat / state

+2 பொதுத் தேர்வில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி முதலிடம்! - +2 பொதுத் தேர்வு

கன்னியாகுமரி: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டில் நான்காவது முறையாக கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

+2 பொதுத் தேர்வில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி முதலிடம்!
author img

By

Published : Apr 19, 2019, 8:52 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளை சேர்ந்த 5244 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் 4858 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.64 விழுக்காடு தேர்ச்சி விகிதமாகும்.

ஏற்கனவே 3 முறை அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது நான்காவது முறையாக மீண்டும் முதலிடத்தை குமரி மாவட்டம் பெற்றுள்ளது.

இந்த சாதனைக்கு காரணமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைத்து பள்ளிகளின் அளவில் குமரி மாவட்டம் 94. 81 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநிலத்தின் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பதினோராவது இடத்தில் இருந்த குமரி மாவட்டம் முன்னேறி இந்த ஆண்டு ஆறாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:கன்னியாகுமரி: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் நான்காவது முறையாக கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

Body:குமரி மாவட்டத்தை மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளை சேர்ந்த 5244 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் 4858 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.64 விழுக்காடு தேர்ச்சி விகிதமாகும்.
குமரிமாவட்டம் ஏற்கனவே 3 முறை அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது நான்காவது முறையாக மீண்டும் முதலிடத்தை குமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு காரணமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அனைத்து பள்ளிகளின் அளவில் குமரி மாவட்டம் 94. 81 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநிலத்தின் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பதினோராவது இடத்தில் இருந்த குமரி மாவட்டம் முன்னேறி இந்த ஆண்டு ஆறாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.