ETV Bharat / state

கஜ பூஜை இல்லாமல் நடைபெற்ற ஆலமூடு இசக்கி அம்மன் கோயில் விழா! - forest department

கன்னியாகுமரி: முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயில் ஆடி மாத பூக்குழி விழாவில் கஜ பூஜை ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்த வனத் துறையினர் தடைவிதித்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவில் விழாவிற்கு யானைகளை பயன்படுத்த வனத்துறை தடை!
author img

By

Published : Jul 31, 2019, 8:17 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் நெல்லை மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ளது முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயில். இந்தக் கோயில் இரு மாவட்ட மக்களுக்கும் எல்லைசாமியாக திகழ்ந்துவருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மிக விமரிசையாக பூக்குழி கொடை விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சிறப்பு அம்சமாக நேற்று நள்ளிரவில் 13 யானைகளைக் கொண்டு இசக்கி அம்மனுக்கு கஜ பூஜை நடைபெறவிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தார்கள்.

இந்நிலையில், கோயிலில் அம்மனுக்கு யானைகளை கொண்டு கஜ பூஜை நடத்துவதற்கு வனத் துறை திடீரென தடை விதித்தது. இதனால் கஜ பூஜை நிகழ்ச்சிக்காக வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இது தொடர்பாக வனத் துறை அலுவலர்களிடம் கோயில் சார்பில் கேட்டதற்கு அவர்களுக்கு இசைவான பதில் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வனத் துறையினரின் தடையை கண்டித்து நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதை காவல் துறையினர் தடுக்கவே மேலும் கொந்தளித்த பக்தர்கள் கோயில் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்திற்கும் வனத் துறை அலுவலர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கோயில் விழாவிற்கு யானைகளை பயன்படுத்த வனத்துறை தடை!

இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மன வேதனையுடன் யானைகள் இல்லாமல் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றார்கள். இந்த ஊர்வலத்தில் வேல் காவடி, அலகு காவடி, தூக்கு காவடி உட்பட பல காவடிகளை எடுத்து பக்தர்கள் பக்த கோஷம் எழுப்பினர்.

இந்த ஊர்வலமானது ஆரல்வாய்மொழி கிருஷ்ணன் கோயிலில் தொடங்கி முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் ஆடி மாத பூக்குழி விழாவில் கஜபூஜைக்கும் யானை ஊர்வலத்திற்க்கும் வனதுறை தடை விதித்ததை தொடர்ந்து கோவில் நிர்வாகத்திற்க்கும் வனத்துறைக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் யானைகள் ஊர்வலம் இல்லாமல் பால் குடம் எடுத்த சென்ற பக்தர்கள். தடை விதித்த வனத்துறைக்கு பக்தர்கள் கடும் கண்டனம்.Body:tn_knk_05_palkudam_procession_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் ஆடி மாத பூக்குழி விழாவில் கஜபூஜைக்கும் யானை ஊர்வலத்திற்க்கும் வனதுறை தடை விதித்ததை தொடர்ந்து கோவில் நிர்வாகத்திற்க்கும் வனத்துறைக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் யானைகள் ஊர்வலம் இல்லாமல் பால் குடம் எடுத்த சென்ற பக்தர்கள். தடை விதித்த வனத்துறைக்கு பக்தர்கள் கடும் கண்டனம்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்திற்க்கும் இடையே எல்லையில் அமைந்துள்ளது முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் . இந்த கோவில் இரு மாவட்ட மக்களுக்கும் எல்லைசாமியாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் மிக விமசர்சையாக பூக்குழி கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக நேற்று நள்ளிரவில் பதிமூன்று யானைகளை கொண்டு இசக்கி அம்மனுக்கு கஜ பூஜை நடைபெற இருந்தது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தார்கள். இந்நிலையில் கோவிலில் அம்மனுக்கு யானைகளை கொண்டு கஜபூஜை நடத்துவதற்க்கு வனத்துறை திடிரென தடை விதித்தது. இதனால் கோவிலுக்கு கஜபூஜை நிகழ்ச்சிகாக வந்து இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் இது தொடர்பாக வனதுறை அதிகாரிகளிடம் கேட்டதற்க்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் வனத்துறையின் தடையை கண்டித்து நேற்று நள்ளிரவு நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் காவல் துறையினர் தடுக்கவே மேலும் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் செலல்லாமல் வாயில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.இதனை தொடர்ந்து இன்று கோவில் நிர்வாகத்திற்க்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனையடுத்து தமிழக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆயிரகனக்கான பக்தர்கள் மன வேதனையுடன் யானைகள் இல்லாமல் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றார்கள். இந்த ஊர்வலத்தில் வேல் காவடி அலகு காவடி தூக்கு காவடி உட்பட பல நேர்ச்சை காவடிகளை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றார்கள். இந்த ஊர்வலமானது ஆரல்வாய்மொழி கிருஷ்ணன் கோவிலில் ஆரம்பித்து முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. வனதுறை மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபடலாம் என்ற தகவலை அடுத்து அப்பகுதி முழுவதும் அதிரடிபடை போலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.கஜபூஜை மற்றும் யானை ஊர்வலம் நடைபெறாததால் தெய்வ குற்றம் நிகழ்ந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.