ETV Bharat / state

மதுக்கடைகளை மூடவேண்டும் - திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி திமுக சார்பில் 101 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுகவினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 14, 2020, 9:41 PM IST

கன்னியாகுமரியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி திமுக சார்பில் 101 இடங்களில் தகுந்த இடைவெளி விட்டு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்செழியன் பேசும்போது, "தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் கரோனா தொற்றினை கட்டுபடுத்த பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக அனைத்து கடைகளையும் மாலை 5 மணிக்கு அடைக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது. ஆனால் அரசால் இயக்கப்படுகின்ற டாஸ்மார்க் கடை மட்டும் இரவு 8 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் டாஸ்மார்க் கடையில் குடிப்பழக்கம் கொண்டவர்கள் அதிகமாக கடையில் குவிகின்றனர். மேலும் இவர்கள் மது போதையில் எந்தவித பாதுகாப்பும் இன்றி, முகக்கவசம் கூட அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனால் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.