குமரி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாகர்கோவிலிலுள்ள எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், “தமிழ்நாடு அரசு 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிவருகிறது.
அதன்படி 2019-2020ஆம் கல்வியாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள 143 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் 7,473 மாணவர்கள், 8,677 மாணவிகள் என மொத்தம் 16,150 பேருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு 6 கோடியே 37 லட்சத்து 15 ஆயிரத்து 236 ரூபாய் ஆகும்” என்றார்.
இதையும் படிங்க: ’நிலுவைத்தொகை தராவிட்டால் மாணவர் சேர்க்கை கிடையாது’ - தனியார் பள்ளிகள் சங்கம்