கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை அடுத்த குலசேகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அனிஷ், பிரகாஷ். இவர்கள் இருவரும் புதூர்கடையில் செயல்பட்டுவரும் டிராவல்ஸ் உரிமையாளரான கிரிஜா என்பவர் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் வேறு ஒரு ஏஜெண்டிடம் விற்கப்பட்டுள்ளனர். அந்த ஏஜெண்ட் அவர்களை வேறு ஒரு ஏஜெண்டிடம் ஆயிரம் வெள்ளிக்கு விற்பனை செய்துள்ளார்.
பின்னர் அங்கு ஒரு கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துள்ளனர். அந்நிறுவனத்தில் 12 மணி நேரம் நின்றுகொண்டே வேலைசெய்துள்ளனர். இதனையடுத்து அந்நிறுவனத்தில் பிரச்னை செய்து இருவரும் வெளியே வந்துள்ளனர். இதனால் வேலையுமில்லாமல், உணவுமில்லாமல் இருவரும் தவித்துவந்துள்ளனர்.
மேலும் இவர்களது பாஸ்போர்ட்டை அந்த ஏஜெண்ட் வாங்கி வைத்துவிட்டு 1000 வெள்ளி தந்தால்தான் பாஸ்போர்ட் தரமுடியும் என்று மிரட்டுவதாகவும், தங்களை எப்படியாவது மீட்கக் கோரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாகச் சித்தரித்த இளைஞர் கைது