திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 88ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வீரமணி பிறந்த நாளை திராவிட கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே திராவிட சித்தாந்தங்களை உள்ளடக்கிய புத்தகங்களான ஒப்பற்ற தலைமை, வாழ்வியல் சிந்தனைகள், மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் ஆகிய மூன்று புத்தகங்களின் குறைந்த விலை விற்பனையினை காஞ்சிபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் தொடங்கிவைத்தார்.
விழாவில் பேசிய அவர், திராவிடர் கழக தலைவர் வீரமணி சிறு வயதிலிருந்தே திராவிட கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்தவர், அவர் நூற்றாண்டை கடந்து வாழ வேண்டும் எனப் பேசினார்.
இதையும் படிங்க:பெரியார் நினைவகத்தில் கனிமொழி