1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் பிறந்தவர் ஜீவானந்தம். இளமையிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 1932ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றார்.
நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர், சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 1952 ல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யபட்டார்.
இந்நிலையில், ஜீவானந்தத்தின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பிரபல கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.