ETV Bharat / state

மரக்கன்றுகள் நட்ட ஜவான்ஸ் குழு

கன்னியாகுமரி: இடலாக்குடி, கரியமாணிக்கபுரம் பகுதிகளிலுள்ள பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் ஜவான்ஸ் குழுவின் சார்பில் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

Jawans team planted saplings in Kanyakumari district

author img

By

Published : Sep 5, 2020, 10:41 PM IST

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரத்து 500 வீரர்கள், கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பின் கீழ் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஜவான்ஸ் குழுவின் 34ஆவது களப்பணியாக கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அருகில் உள்ள குளத்தூர், கரியமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அருகாமையில் உள்ள ஒரு பூங்காவை பராமரித்து அதன் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உள்பட ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டனர். மேலும் சமூக பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்களை ஆணையர் ஆஷா அஜித் பாராட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.