கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மலையோர பகுதிகளின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், குமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 2.5 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 17ஆம் தேதி வரை தென் மேற்கு திசையில் இருந்து 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசு வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.