கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்அலையை விட இரண்டாம் அலையில், தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதோடு உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் புதிய உச்சநிலையை எட்டி உள்ளது. நாகர்கோவில் அருகே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மருத்துவர்கள், செவலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட 75 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், கரோனா நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
நேற்று (மே.17) ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 1,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616ஆக உயர்ந்து உள்ளது.
இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் அரசு சித்த மருத்துவர்!