கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லையில் இருக்கும் சிதம்பரபுரம் கிராமத்தில் சூராணிக்கரை ஸ்ரீ நாக கன்னி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் நடைபெற்ற வன தெய்வங்களுக்கான சிறப்பு அலங்கார தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பின் அம்மனின் அருள்வந்து ஆடிய சாமியார் ஒருவர், கோயில் வளாகத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த சப்பாத்தி கள்ளி, கருவேல முள்ளின் மேல் அமர்ந்தபடி, தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.
இதுபோன்று விநோத மூடநம்பிக்கையை வளர்த்தெடுக்கும் செயலில் ஈடுபடுவோரை ஆதரிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.