கன்னியாகுமரி: "புனீத் சாகர் அபியான்" என்ற பெயரில் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலரும் இதில் ஈடுபட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் நேற்று (ஜனவரி 27) NCC மாணவ மாணவிகள் 150 பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுட்டுள்ளனர்.
அப்போது கொட்டாரம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 58 மாணவ, மாணவிகளுக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் 45 பேர் கொட்டாரம் அரசு மருத்துவமனையிலும், 13 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களிடம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் காலையில் 150 பேரும் இட்லி, சாம்பார், சட்னி சாப்பிட்டதாகவும், அதன் பின்பு குளிர்பானம் குடித்ததாகவும் கூறியுள்ளனர். குளிர்பானம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமோசா விற்கும் இன்ஜினியர்.. அதிலும் புதுமை புகுத்தி நல்ல வருவாய்!