ETV Bharat / state

குமரியில் நவம்பர் 12 இல் ஐடிஐ மாணவர்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு! - கன்னியாகுமரி

ஐடிஐ மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Kanniyakumari collector
Kanniyakumari collector
author img

By

Published : Oct 14, 2020, 9:09 PM IST

கன்னியாகுமரி : ஐடிஐ மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் 15 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் விருப்பமான தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள தொழில் பிரிவை 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையதளம் வாயிலாக தேர்வு செய்யலாம்.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அருகிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் உதவி மையம் மூலமாகவோ சேர்க்கைக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'சட்டப்பிரிவு 370ஐ திரும்ப அமல்படுத்துவதற்கான போராட்டம் தொடரும்' மெகபூபா முஃப்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.