ETV Bharat / state

செல்போன் பிஸி டோனால் மனைவியைக் கொன்ற கணவன்

author img

By

Published : May 17, 2021, 5:00 PM IST

கன்னியாகுமரி: மனைவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது "வேறு ஒரு நபருடன் தொடர்பில் உள்ளார்"என வந்த பிஸி டோன் குரலால், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"வேறு நபருடன் தொடர்பில் உள்ளார்" - செல்போன் பிசி டோனால் மனைவியை கொன்ற கணவன்

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். பள்ளிப் படிப்பை முடிக்காத 42 வயதான இவர், வெள்ளிச்சந்தைப் பகுதியில் வாகனங்களுக்குச் சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து ஊரான ஈத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த உமா (33) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயேயிருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வீட்டிற்கு அடிக்கடி வெளி நபர்கள் வந்து சென்றுள்ளனர். இதனால், ரமேஷுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக மனைவியை துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், உமாவின் பெற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காண தங்களது கிராமமான ஈத்தங்காட்டில் ரமேஷ் பெயரில் இடம் வாங்கி, வீடு ஒன்றைக் கட்டி குடியமர்த்தியுள்ளனர்.

செல்போன் பிஸி டோனால் மனைவியைக் கொன்ற கணவன்

அந்த வீட்டிலும் உமா, தனது டெய்லரிங் பணியைத் தொடர்ந்துள்ளார். தன்னிடம் துணி தைக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விதவிதமான மாடல்களை யூ-ட்யூப்பில் பார்த்து அந்த மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து, அவர்களிடம் செல்போனில் பேசி, தனது பணியில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.

இந்த சமயத்தில் ரமேஷ் தனது செல்போனிலிருந்து அடிக்கடி மனைவியின் செல்போனுக்குத் தொடர்பு கொள்ளும் போது அவர் "வேறு ஒரு நபரிடம் தொடர்பில் உள்ளார்" என செல்போன் சர்வரால் கூறப்படும் குரல் பதிவினை உண்மை என நம்பி, உடனடியாக வீட்டிற்கு வந்து, ''நீ யாருடன் தொடர்பில் இருக்கிறாய்'' எனக் கேட்டு தகராறு செய்வதும் பின் சமாதானமாகி செல்வதும் தொடர் கதையாக இருந்துள்ளது.

செல்போனில் நாம் ஒருவரை அழைக்கும்போது, மறு முனையில் உள்ளவர் யாரிடமாவது பேசிக் கொண்டிந்தால், இது போல வரும் என குடும்பத்தார் விளக்கியும் ரமேஷின் மனம் ஏற்க மறுத்துள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில் வீட்டிலேயே காவலாளியாக முடங்கிய ரமேஷ் மனைவியை வேவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது வீட்டைச் சுற்றி மறைக்கும் அளவிற்கு ஆளுயர சுற்றுச் சுவர் கட்டியதோடு மனைவியையும் வெளியே அனுப்பாமல் வீட்டுச் சிறையிலேயே வைத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த உமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவனுக்குத் தெரியாமல், தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஊரார் முன்னிலையில், சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்த ரமேஷ் நல்லவர் போல் நடித்து, அன்பாக இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு (மே.16) மனைவி மற்றும் குழந்தைகளைத் தூங்க வைத்த ரமேஷ் நள்ளிரவு ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, தனது மனைவியின் கழுத்தைக் கதற கதற சரமாரியாக அறுத்துள்ளார். கதறல் சத்தம் கேட்டு, உமா பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் எழும்பி, சத்தம் போடவே, ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறி, தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிச்சந்தை காவல் துறையினர் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது உமாவின் மூத்த மகள், 'நான்கு நாட்களுக்கு முன்பே, அப்பா கத்தியை தீட்டி, வீட்டின்பின் பக்கம் கொண்டு வைத்தார். எதற்கு என்று தெரியாது' எனக் கூற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய ரமேஷை இரணியல் அருகே சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்பத்தகராறு காரணமாக கணவன் - மனைவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.