கன்னியாகுமரி : நாகர்கோவிலில் உள்ள பாரம்பரிய மருத்துவமனை ஒன்றில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜெயலால் இன்று (ஜூலை 14) திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”இந்தியா முழுவதும் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் பொதுமக்கள் கோயில் விழாக்கள் போன்றவற்றில் அதிகமாக கூடுவது தேவையற்றது. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் கரோனா மூன்றாவது அலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடு, தகுந்த இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீட் தேர்வை பொருத்தவரை சுமார் 15 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி அதில் 85 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.