கன்னியாகுமரி: தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை இன்று (ஜூலை 13) ஆய்வு செய்தார். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,"அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழ்நாடு கோயில்களின் சிலைகளை மீண்டும் மீட்க டிஜிபி, உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் பெற்று வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு சாமி சிலைகளை கொண்டு வர நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமான நகைகள், சாமி சிலைகள் பிற மாநிலங்களில் உள்ளன. அவற்றையும் உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: இந்தாண்டு இறுதிக்குள் சுசீந்திரம் கோயிலில் குடமுழுக்கு - சேகர் பாபு தகவல்